உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி ரோடு மேம்பாலம் உள்தணிக்கை குழு ஆய்வு

அவிநாசி ரோடு மேம்பாலம் உள்தணிக்கை குழு ஆய்வு

கோவை, : கோவை - அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்படும் மேம்பாலப் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உள்தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.மேம்பாலப் பணிகள் இதுவரை, 70 சதவீதம் முடிந்திருக்கிறது. மொத்தம், 8 இடங்களில் ஏறுதளம், இறங்கு தளம் அமைக்க வேண்டும்; 7 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது என மாநில நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டங்கள் பிரிவினர் தெரிவித்தனர்.பின், உப்பிலிபாளையத்தில் அமைக்கப்படும் சாய்வு தளத்தின் அளவு சரிபார்க்கப்பட்டது. விமான நிலைய இறங்கு தள துாண்களின் திறன் அறியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இறங்கு தளம் அமைப்பதற்கான தடுப்புச்சுவர் அளவு சரிபார்க்கப்பட்டது. ஓடுதளம் தயாரிக்கும் மையமான தென்னம்பாளையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது, கோட்டப்பொறியாளர்கள் ரமேஷ் கண்ணா, சமுத்திரக்கனி மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை