உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐ.ஏ.டி.ஏ., தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு விருது

ஐ.ஏ.டி.ஏ., தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு விருது

கோவை:நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லுாரியில், ஐ.ஏ.டி.ஏ., தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, விருது வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக, கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன், எஸ்.கே.ஏ.எல்., சங்கத்தின் தலைவர் அருண்குமார் பங்கேற்றனர்.சாதனை புரிந்த, 53 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகளை விருந்தினர்கள் வழங்கினர். தேசியளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த முதுகலை மாணவர்கள் கிஷோர் மற்றும் அபிமன்யூ ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர்.நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார், நிர்வாக இயக்குநர் நாகராஜா, முதல்வர் பாலாஜி, முதுகலை வணிக நிர்வாக துறைத்தலைவர் மற்றும் ஐ.ஏ.டி.ஏ., ஒருங்கிணைப்பாளர் மல்லிகா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ