உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்., சார்பில் இறகு பந்து போட்டி

எஸ்.என்.எஸ்., சார்பில் இறகு பந்து போட்டி

கோவை;எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்கள் சார்பில், பத்திரிகையாளர்களுக்கான இறகுப் பந்து போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதில், பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு. இரட்டையர் பிரிவில் விளையாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியில், ராஜேஷ் மற்றும் செல்வகுமார் அணி முதல் பரிசையும், பிரசாத் மற்றும் டென்னிஸ் அணி இரண்டாம் பரிசையும், அருண் மற்றும் சூர்யா சம்பத் அணி மூன்றாம் பரிசையும், சத்யராஜ் மற்றும் லட்சுமணன் அணி நான்காம் பரிசையும் வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் செந்துார் பாண்டியன், செயல் தலைவர் மோகன நாராயணன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை