உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாங்க் ஆப் மஹாராஷ்டிரா லாபம் 45 சதவீதம் உயர்வு

பாங்க் ஆப் மஹாராஷ்டிரா லாபம் 45 சதவீதம் உயர்வு

கோவை;பாங்க் ஆப் மஹாராஷ்டிராவின், 4வது காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் உயர்ந்துள்ளது.வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரி நிது சக்சேனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பாங்க் ஆப் மஹாராஷ்டிராவின், 4வது காலாண்டு நிகர லாபம் 45 சதவீதம் உயர்ந்து, ரூ.1,218 கோடியாக உள்ளது. நிகர வட்டி வருமானம் உயர்வு, குறைந்த வரி வழங்கல் ஆகியவற்றால் லாபம் உயர்ந்துள்ளது. நிகர வட்டி வரம்பு, முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 3.56 லிருந்து 3.92 சதவீதமாக உயர்ந்துள்ளது. காலாண்டில் நிகர வட்டி வருமானம், 18சதவீதம் உயர்ந்து ரூ.2,584 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு, இது ரூ.2,187 கோடி.கட்டண அடிப்படையிலான வருமானம், கருவூல வருமானம் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கணக்குகளில், திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பிற வருமானம் 24 சதவீதம் உயர்ந்து, ரூ.1,022 கோடியாக (முந்தைய ஆண்டு ரூ.822 கோடி) உள்ளது.2024ம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி, மொத்த வைப்புத்தொகை 15.66 சதவீதம் அதிகரித்து, ரூ.2,70,747 கோடியாக இருந்தது. குறைந்த வட்டி வைப்புத் தொகைகள், மொத்த வைப்புத் தொகையில், 53.38 சதவீதத்திலிருந்து, 52.73 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், நிகர வட்டி வருமானம் 3.70 -- 3.90 சதவீதம் வரை இருக்கும்.இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ