உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூடைப்பந்து அரையிறுதி போட்டி; லீக் சுற்றில் நான்கு அணிகள் களம்

கூடைப்பந்து அரையிறுதி போட்டி; லீக் சுற்றில் நான்கு அணிகள் களம்

கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து அரையிறுதிப் போட்டியில் நான்கு அணிகள் 'லீக்' முறையில் விளையாடி வருகின்றன.பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 49வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையே, ஆண்களுக்கான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி கடந்த, 25ம் தேதி முதல் நடந்துவருகிறது. இதில் தலைசிறந்த எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் அரையிறுதி போட்டிகள் 'லீக்' முறையில் நடக்கின்றன.மூன்றாவது நாளான நேற்று காலை, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி, 68-40 என்ற புள்ளிகளில் திருச்சி புனித ஜோசப் கல்லுாரி அணியை வீழ்த்தியது. சென்னை, டி.ஜி. வைஷ்ணவ் கல்லுாரி அணி, 86-53 என்ற புள்ளிகளில் திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை