உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எப்., சந்தாதாரர்களிடம் வரும் 29ல் குறைகேட்பு

பி.எப்., சந்தாதாரர்களிடம் வரும் 29ல் குறைகேட்பு

கோவை;கோவை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) சந்தாதாரர்கள் குறைகேட்பு கூட்டம், 29ம் தேதி நடக்கிறது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து சந்தாதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரே நாளில் 'நிதி ஆப்கே நிகட்' என்ற பெயரில், குறைகேட்பு கூட்டம் நடத்துகின்றன.கோவை பாப்பம்பட்டி பிரிவில், சிந்தாமணிபுதுாரில் உள்ள செல்வராஜ் மில்ஸ் பிரைவேட் லிமிடெட் வளாகத்தில், 29ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் குறைகள், பிரச்னைகள் இருந்தால், அன்றைய தினம் காலை, 10:30 முதல் மதியம், 12:30 மணி வரை தெரிவிக்கலாம்.உறுப்பினர் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் குறையை தீர்க்க, யு.ஏ.என்., எண் அல்லது வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன உத்தரவு அவசியம். குறைகளை, pghs.epfindia.gov.inஎன்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம் என, கோவை மண்டல வைப்பு நிதி ஆணையாளர் (2) வைபவ் சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை