உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள்

பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டிகள்

கோவை:பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையேயான செஸ் போட்டியில், மாணவர்கள் திறனை வெளிப்படுத்தினர்.கோவை குனியமுத்துார் கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி விளையாட்டு துறை சார்பில், செஸ் போட்டிகள் நடந்தன. பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டியில், 33 கல்லுாரியை சேர்ந்த, 198 மாணவர்கள், 28 கல்லுாரிகளை சேர்ந்த, 168 மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர்.மூன்று நாட்கள் நடக்கும் போட்டியில், குழு மற்றும் தனிநபர் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த குழு போட்டிகளில், ஏராளமான கல்லுாரிகளின் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நான்கு சுற்றுகள் முடிவில், மாணவர்கள் பிரிவில், பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி, வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை, அறிவியல் கல்லுாரி, பொள்ளாச்சி, என்.ஜி.எம்., கலை, அறிவியல் கல்லுாரி, கோவை அரசு கலை கல்லுாரி ஆகிய கல்லுாரிகள், முதல் ஐந்து இடங்களை பிடித்தன.மாணவியர் பிரிவில், பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி, வெள்ளாளர் பெண்கள் கல்லுாரி, பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுாரி, கோபி கலை, அறிவியல் கல்லுாரி, திருப்பூர் குமரன் பெண்கள் கல்லுாரி ஆகிய கல்லுாரிகள், முதல் ஐந்து இடங்களை பிடித்தன. தொடர்ந்து ஐந்தாம் சுற்றுகள் நடந்தன. இன்று தனிநபர் போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ