உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதி படிப்பகம் துவக்கம்

பாரதி படிப்பகம் துவக்கம்

அன்னுார் : அன்னுாரில் உள்ள பாரதி சிந்தனையாளர் பணி மையம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, பாரதியார் குறித்தும், தமிழ் இலக்கியங்கள் குறித்தும் பேச்சு மற்றும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிந்தனையாளர் பணி மையத்தின் நிறுவனர் டாக்டர் கோபியின் 100வது பிறந்த தினம் வருவதை முன்னிட்டு, பாரதி படிப்பகம் துவக்க முடிவு செய்யப்பட்டது. வாசிப்பை ஊக்குவிக்கவும், பாரதியின் படைப்புகளை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில், சிந்தனையாளர் பணி மையத்தின் நிறுவனர் டாக்டர் கோபி, நிர்வாகிகள் சுப்பையன், சாந்தமூர்த்தி,ஒன்றிய கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி