| ADDED : ஏப் 30, 2024 11:15 PM
கிணத்துக்கடவு;தமிழக அரசு சார்பில், அரசு பள்ளியில் கல்வி பயிலும் பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது, கல்வி கற்க நீண்ட துார பயணத்தை மேற்கொள்ள எளிதாக இருக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து வந்து படிக்கின்றனர்.இதில், பிளஸ் 1 முடித்து, பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், 75 மாணவர்கள், மற்றும் 116 மாணவியர் என, மொத்தம் 191 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.