உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி; தமிழக எல்லையில் கண்காணிப்பு

பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி; தமிழக எல்லையில் கண்காணிப்பு

பொள்ளாச்சி : கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலியால், பொள்ளாச்சி அருகே, தமிழக - கேரளா எல்லையில், கால்நடைத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கேரள மாநிலம், ஆலப்புழாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக - கேரள மாநில எல்லை சோதனைச்சாவடிகளில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.அதன்படி, பொள்ளாச்சி அருகே மீனாட்சிபுரம், செமணாம்பதி, நடுப்புணி, கோபாலபுரம், வடக்குகாடு, வளந்தாயமரம் உள்ளிட்ட, ஏழு சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழக - கேரள எல்லை சோதனைச்சாவடிகளில், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சோதனைச்சாவடிகளிலும், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் பொருட்கள் ஏற்றி வந்தால், சோதனை செய்து விபரங்களும் கேட்டறியப்படுகின்றன. பாதிப்பு இல்லை என்றாலும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ