உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அட்சய திருதியையன்று நகை வாங்க இப்போதே முன்பதிவு

அட்சய திருதியையன்று நகை வாங்க இப்போதே முன்பதிவு

கோவை;அட்சயதிரிதியை வரும், 10ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜூவல்லரிகளில் நகைகளுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. சித்திரை மாதத்தில் அமாவாசை திதிக்கு பின் வரும், மூன்றாவது வளர்பிறை திதியை அட்சயதிருதியை என்று அழைக்கிறோம். இந்நாள், அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. நடப்பாண்டு வரும், 10ம் தேதி வெள்ளி அதிகாலை, 4:17 மணிக்கு திருதியை திதி துவங்கி மே 11ம் தேதி மதியம், 2:50 மணிக்கு நிறைவடைகிறது. இவ்விரு நாட்களிலும் தங்கம், வெள்ளி ஆபரணங்களை வாங்குவதற்கு உகந்த நேரமாகும். அட்சய திருதியை முன்னிட்டு கோவையிலுள்ள, நுாற்றுக்கும் மேற்பட்ட சிறு மற்றும் பெரிய நகை கடைகளில் முன்பதிவை துவக்கிவிட்டன.குறைந்த பட்சம், 10 சதவீதம் முன்பணம் செலுத்தி, பிடித்தமான நகைகளை தேர்வு செய்து ஆர்டர் கொடுத்து விடலாம். அட்சய திருதியை அன்று, நாம் ஆர்டர் கொடுத்த ஆபரணத்தை அன்றைய விலைக்கு பெற்றுக்கொள்ளலாம்.தங்கத்தின் விலை குறைந்திருந்தால், விலையை குறைத்துக் கொடுக்கவும் ஜூவல்லரிகள் முன் வந்துள்ளன. சில ஜூவல்லரிகளில் முன்பதிவு செய்யும் தங்க நாணயங்களுக்கு, செய்கூலி இல்லை. சில கடைகளில் கோடை சுற்றுலா பேக்கேஜ் டிக்கெட்டுகளை வழங்குகின்றனர்.இதனால், பலரும் ஆபரணங்களை வாங்குவதற்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை