உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ்சை நிறுத்தி சோதனை: பறக்கும் படை அத்துமீறல்

பஸ்சை நிறுத்தி சோதனை: பறக்கும் படை அத்துமீறல்

கோவை : லோக்சபா தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க பறக்கும் படையினர், தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையால், அரசியல்வாதிகளை விட, சாதாரண மக்கள் தான் தினந்தோறும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.வழக்கமாக, இரு சக்கர வாகனங்கள், கார் போன்றவற்றை சோதனையிட்ட அதிகாரிகள், நேற்று ரேஸ்கோர்சில் சென்ற தனியார் பஸ்சை திடீரென நிறுத்தினர். பஸ்சுக்குள் ஏறிச்சென்ற அதிகாரிகள், சீட்டுக்கு கீழும், பயணிகளின் உடமைகளையும் சோதனையிட்டனர். தெரு, தெருவாக பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் கார்களை சோதனையிடாமல், சாதாரண மக்களை துன்பறுத்துவது ஏன் என, பயணிகள் கேள்வி எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ