| ADDED : ஆக 07, 2024 11:43 PM
கோவை: திருக்குறள் உலகம் கல்விச்சாலை, திருக்குறள் வழியில் பண்பாடு, ஆளுமைத்திறன், மேலாண்மைத்திறன், நிர்வாகத்திறன் மேம்பாடு போன்ற பயிலரங்குகளை நடத்தி வருகிறது.இந்நிலையில், பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரியின் தமிழ்த்துறை மற்றும் திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து, திருக்குறள் கருத்தரங்கை நடத்துகின்றன.வரும் செப்.,30ம் தேதி அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரியில், காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை, கருத்தரங்கு நடக்கிறது.சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம். gmail.comஎன்ற இ -மெயில் முகவரிக்கு, வரும் செப்.,1ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும்.கருத்தரங்கில் கலந்து கொள்ள, முன்பதிவு செய்வது அவசியம். மேலும் விபரங்களுக்கு, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் திருக்குறள் கணேசன் 99948 92756, முனைவர் சுகன்யா 89407 08989 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.