உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 10ம் வகுப்பு, பிளஸ் 2 கணிதம் நேரடியாக படிக்கலாமா?

10ம் வகுப்பு, பிளஸ் 2 கணிதம் நேரடியாக படிக்கலாமா?

இசை, ஓவியம், பிற மொழிகளைக் கற்றல் ஆகியவை போன்றுதான் கணிதமும் ஒரு தனித்திறன்.பிற பாடங்களைப் போல கணிதத்தை சுயம்பாக கற்றுக்கொள்வது என்பது கடினமானது. அதேசமயம் சிறந்த ஆசிரியர் வாய்த்தால் கணிதம் கற்றுக்கொள்வது மாணவர்களுக்கு எளிதாகிவிடும். மேலும், ஆர்வமும் வளரும்.உதாரணமாக, 8ம் வகுப்பு அறிவியலையோ, சமூக அறிவியலையோ புரிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரடியாகப் படித்தால் ஓரளவு தெரிந்துகொள்ள இயலும். ஆனால், 8ம் வகுப்புக் கணிதத்தைத் தெரிந்துகொள்வதற்காக நேரடியாகப் படித்தால் நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியாது. அதற்கு முன்பு 7ம் வகுப்பு வரை உள்ள கணிதப் புத்தகங்களைப் படித்திருந்தால் மட்டுமே 8ம் வகுப்புக்கான கணிதப் புத்தகம் புரியும். ஏனெனில், 7ம் வகுப்பு வரை படித்த கணிதத்தின் தொடர்ச்சியே 8ம் வகுப்பில் தொடரும். எனவே, கணிதத்தை ஒரு தொடர்மொழி என அழைக்கலாம்.இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதால்தான் 9ம் வகுப்பு படிக்கும்போதும், 11ம் வகுப்பு படிக்கும்போதும் அதைப் படிக்காமல் 10ம் வகுப்பு, 12ம் வகுப்புப் பாடங்களை நேரடியாகப் படிக்க மாணவர்களை வற்புறுத்துகிறோம். இதனால்தான் அவர்கள் மனப்பாடம் செய்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் வாங்கும் மாணவரால் கூடக் கணிதத்தில் அதிக மதிப்பெண்களை வாங்க முடியவில்லை. ஏனெனில் அது ஒரு தொடர்மொழி என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.கணிதம் கற்பது மற்ற பாடங்களைக் கற்பது போன்று அல்ல. இதற்கென்று வித்தியாசமான கற்கும் திறன் தேவைப்படுகிறது. மற்ற பாடங்களுக்கு அவற்றுக்கான புத்தகங்களைப் படித்து, புரிந்துகொண்டு பின்பு தேர்வில் எழுதினாலே போதும். ஆனால், கணிதத்தில் வெற்றிபெற இது மட்டும் போதாது. புரிந்துகொள்ளுதல் - புரிந்துகொண்டதை வெளிப்படுத்துதல் - கற்றுக்கொண்டதைப் பயன்படுத்துதல் - மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்தல் ஆகியன கணிதத்திற்கு அவசியம்.மேலும், பயன்படுத்தும் திறன் இல்லையெனில், அதனைக் கணிதத்துக்கான அறிவாகச் சொல்ல முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை