உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார், 4 பைக்குகள் மோதல் இருவர் பலி; 4 பேர் காயம் ஒன்வேயில் பயணித்ததால் விபரீதம்

கார், 4 பைக்குகள் மோதல் இருவர் பலி; 4 பேர் காயம் ஒன்வேயில் பயணித்ததால் விபரீதம்

கிணத்துக்கடவு;பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு, தாமரைகுளம் அருகே நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; நான்கு பேர் படுகாயமடைந்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த பாலாஜி, 28, தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை செய்கிறார். இவர், தனது உறவினரை கோவை விமான நிலையத்தில் இறக்கி விட்டு, காரில் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை வந்தார்.கிணத்துக்கடவு, தாமரைக்குளம் அருகே வந்த போது, ரோட்டில் 'ஒன்வே' எதிர்திசையில், மாசநாயக்கன்புதுரை சேர்ந்த குமார், 51 மற்றும் இவரது மனைவி மரகதம், 45, ஆகியோர் ஒரு பைக்கிலும், சதீஷ்குமார், 30, தனி பைக்கிலும், பட்டணத்தை சேர்ந்த சம்பத்குமார்,41 மற்றும் பழனிசாமி, 51 ஆகியோர் ஒரு பைக்கிலும், தாமரைகுளத்தை சேர்ந்த திருமூர்த்தி,51, மற்றொரு பைக்கிலும் வந்தனர். நான்கு பைக்குள் 'ஒன்வே'யில் வந்ததால் பாலாஜி, தடுமாற்றம் அடைந்து நான்கு பைக்குள் மீதும் மோதினார்.விபத்தில் பைக்கில் வந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில், பழனிசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், சிகிச்சை பலனளிக்காமல் குமார் இறந்தார். மேலும், நான்கு நபர்கள் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் அனைவரும், தாமரைக்குளம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் பணிக்கு செல்ல வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.காரை ஓட்டிய பாலாஜி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ