உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தவறுதலாக அனுப்பிய ரூ.19 லட்சத்தை திருப்பித்தர மறுத்தவர்கள் மீது வழக்கு

தவறுதலாக அனுப்பிய ரூ.19 லட்சத்தை திருப்பித்தர மறுத்தவர்கள் மீது வழக்கு

கோவை: தவறுதலாக அனுப்பிய ரூ.18.95 லட்சம் பணத்தை, திருப்பி தர மறுத்த நிறுவன நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கோவை, பொங்கலுார், காரேகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்து ராமன், 55. இவர் கே.என்.ஜி.புதுார் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது நிறுவனம், ஓஸ்வால் வெல்டுமெஸ் பிரைவெட் லிமிடெட் மற்றும் ஓஸ்வால் மினரல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன், வர்த்தகம் செய்து வந்தது.இந்நிலையில் கடந்தாண்டு, அக்., 25ம் தேதி முத்து ராமன் பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து, ஓஸ்வால் வெல்டுமெஸ் நிறுவனத்திற்கு ரூ.20.95 லட்சம் அனுப்பப்பட்டது. ஆனால், இரண்டு மாதங்கள் ஆகியும் ,ஓஸ்வால் வெல்டுமெஸ் நிறுவனத்திற்கு பணம் வராததால் முத்து ராமனிடம் கேட்டுள்ளனர். அப்போது, பணம் அனுப்பப்பட்டு விட்டதாக முத்துராமன் தெரிவித்தார். எனினும், தங்கள் நிறுவனத்தின் கணக்குகளை பரிசோதித்து பார்த்த போது, ஓஸ்வால் வெல்டுமெஸ் நிறுவனத்திற்கு பதிலாக, தவறுதலாக ஓஸ்வால் மினரல் நிறுவனத்திற்கு அனுப்பியது தெரியவந்தது.இதையடுத்து முத்து ராமன், ஓஸ்வால் மினரல்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தின் உரிமையாளர்கள், பணத்தை வங்கியில் பிடித்தம் செய்து விட்டதாக என கூறி, நான்கு காசோலைகளை கொடுத்துள்ளனர்.அதை முத்து ராமன் வங்கியில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது. முத்து ராமன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் ஓஸ்வால் மினரல் நிறுவன உரிமையாளர்கள் தீபக் மற்றும் மோனிகா ஆகியோர், பணத்தை வங்கியில் இருந்து எடுத்தது தெரியவந்தது. பணத்தை திருப்பி கொடுக்கும் படி அறிவுறுத்தினர். அவர்கள் முதற்கட்டமாக, ரூ. 2 லட்சம் மட்டும் கொடுத்தனர். பாக்கி பணம் கொடுக்கவில்லை. தீபக் மற்றும் மோனிகா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி