உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடையின் கொண்டாட்டம் கலையும், கைவண்ணமும் புதிய அனுபவம்; மனதுக்கு இதம்

கோடையின் கொண்டாட்டம் கலையும், கைவண்ணமும் புதிய அனுபவம்; மனதுக்கு இதம்

கோவை:கோடை விடுமுறையில் குழந்தைகள் ஜாலியாக இருப்பதோடு மட்டுல்லாமல், புதிதாக ஓர் கலையையும் கற்க வேண்டும் என்ற நோக்கில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்விக் குழுமம் இணைந்து, 'கலையும் கைவண்ணமும்' பயிற்சி அளித்து வருகிறது.கோடைகால இலவச ஓவியம் வரைதல், ஆபரண தயாரிப்பு பயிற்சிகள் அபார்ட்மென்டுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 13வது நாளாக இந்நிகழ்ச்சி, பீளமேடு ஸ்ரீ ராம் விஜயா ஹைட் அபார்ட்மென்டில் நேற்று நடத்தப்பட்டது.இதில், கேரள முரல் பெயிண்டிங், ஆப்பிரிக்க ஓவியங்கள், அலங்கார ஆபரண தயாரிப்பு, ஆர்ட் அண்ட் கிராப்ட் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 'பெவிகிரில்' நிறுவனத்தின் முன்னணி ஓவிய வல்லுநர்கள் மற்றும் சிறந்த ஆபரண தயாரிப்பாளர்கள் அவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டன.பப்பெட்ஸ், சந்திராயன் 3 கிராப்ட் என, சுட்டீஸ்கள் ஒருபுறம் குஷியாக இருக்க, கலர்புல்லான பெயிண்டிங் மற்றும் ஆர்ட் ஒர்க்குகளில் பெண்கள் பிஸியாக இருந்தனர். பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் மகளிருக்கு கொஞ்சம் ஓய்வளித்து, கலைகளில் ஈடுபடுத்தியது நல்ல அனுபவத்தை அளித்துள்ளதாகவும், ரிலாக்ஸாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராம் விஜயா ஹைட் அபார்ட்மென்ட் அசோசியேஷன் பொருளாளர் அனிதா, துணைத் தலைவர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.வாய்ப்புக்கு நன்றிநான் இந்த, 'ஆர்ட் ஒர்க்'களை முதல்முறை செய்றேன். நல்ல அனுபவமாக இருக்கு. பயிற்சியாளர்கள் எளிமையாக சொல்லிக் குடுக்குறாங்க. இந்த வயதில் இதெல்லாம், நம்மாலும் செய்ய முடியும்கிறது, ரொம்ப ஹாப்பியா இருக்கு. இதுபோல பல கலைகளை கத்துக்கனும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை வழங்கிய தினமலருக்கு மிக்க நன்றி.- சுமதி.ரொம்ப மகிழ்ச்சி'இந்தப் பயிற்சிகள் செய்யறதுக்கு ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் ஒன்னா சேர்ந்து, ஆர்ட் ஒர்க் செய்யறது, புது எக்ஸ்பீரியன்ஸா இருக்கு.- அனிதா.எளிய பயிற்சி'இந்த ஆர்ட் ஒர்க் எல்லாம் நான் முதல்முறை பண்றேன். ஈஸியா சொல்லிக் குடுத்தாங்க. லீவு நாட்களில் பிரெண்ட்ஸ் கூட சேர்ந்து இந்த மாதிரி யூஸ்புல்லா செய்றது, நல்ல பீல் ஆக இருக்கு.- தனன்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !