உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் பராமரிப்பு துவக்க சி.இ.ஓ., உத்தரவு

பள்ளிகளில் பராமரிப்பு துவக்க சி.இ.ஓ., உத்தரவு

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்,பராமரிப்புப் பணிகளை துவங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர் சேர்க்கை மற்றும் துணைத் தேர்வுகளுக்கு,சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், 2024 - -2025 கல்வியாண்டிற்கு தயாராகும் வகையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளைத் துவங்க வேண்டும் என, பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி நுழைவாயில், கலையரங்கம், வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் பழுதடைந்திருந்தால் அவற்றை சரிசெய்ய வேண்டும், தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மின்கம்பி, கேபிள்களில் உரசும் வகையில் உள்ள, மரக்கிளைகளை வெட்ட வேண்டும், வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை, உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ''வரும் 27ம் தேதி முதல் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் துவங்கப்படும். பள்ளிகள் திறப்புக்கு முன், அனைத்துப் பணிகளையும் முடிக்க,தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ