உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேம்பர் டே விளையாட்டு களத்தில் அசத்திய அணிகள்

சேம்பர் டே விளையாட்டு களத்தில் அசத்திய அணிகள்

கோவை;இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை கிளை சார்பில், உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.ஆண்டுதோறும் செப்., மாதம், இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை கிளையின் சார்பில், 'சேம்பர் டே' கொண்டாடப்படும். நடப்பாண்டு முதன் முறையாக, உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியை, வர்த்தக சபை தலைவர் ஸ்ரீராமுலு துவக்கி வைத்தார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கென, தனித்தனி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சமூக சேவையில் சிறப்பாக பணிபுரிந்த தனிநபர் மற்றும் குழுவினர் கவுரவிக்கப்பட்டனர்.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, சேம்பர் டே நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. செயலாளர் அண்ணாமலை, துணைத் தலைவர்கள் சுந்தரம், துரைராஜ், முன்னாள் தலைவர் நந்தகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை