உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

ஏமாற்றப்பட்டவர்கள் புகார் அளிக்க அழைப்பு

கோவை;கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகில் இயங்கி வந்த, சன்மேக்ஸ் என்ற நிறுவனத்தில் மூதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்மந்தமாக தொடர்ந்து புகார்கள் வந்தன.சன்மேக்ஸ் நிறுவனத்தின் மீதும், அதன் சி.இ.ஓ.,வாக இருந்த சிவராமகிருஷ்ணன் மற்றும் கீதா எனற கீதாஞ்சலி ஆகியோர் மீதும், கோவை பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்து, பணம் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவர்கள், கோவை பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம், தங்களுடைய அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து, புகார் மனு அளிக்கலாம்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை