உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஸ்டர் முன்னிட்டு சர்ச்சுகளில் சிறப்பு ஆராதனை: பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிய கிறிஸ்தவர்கள்

ஈஸ்டர் முன்னிட்டு சர்ச்சுகளில் சிறப்பு ஆராதனை: பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிய கிறிஸ்தவர்கள்

போத்தனூர்;ஈஸ்டர் முன்னிட்டு சர்ச்சுகளில் நடந்த சிறப்பு ஆராதனைகளில், கிறிஸ்தவர்கள் பங்கேற்று, வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.கிறிஸ்தவர்களின் தவக்காலம் பிப்., 14ல் துவங்கியது. கடந்த, 24ல் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடந்தது. இதையடுத்து புனித வாரம் துவங்கியது. பெரிய வியாழனன்று சிறப்பு ஆராதனை நடந்தது.புனித வெள்ளியன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூர்ந்து வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, நேற்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் கொண்டாடப்பட்டது.இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு டவுன்ஹால், புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில், கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில், சிறப்பு திருப்பலி நடந்தது. பங்குதந்தை தனசேகர் உடனிருந்தார். நேற்று காலையும், சிறப்பு ஆராதனைகள் நடந்தன.போத்தனூர் அடுத்த மேட்டூர் கார்மெல் அன்னை சர்ச்சில் நடந்த, தமிழ் ஆராதனையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வு, தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது.நேற்று ஆங்கில மொழி ஆராதனை நடந்தது. பங்கு தந்தை ரசல் ராஜ், உதவி பங்கு தந்தை எட்வர்டு ஆகியோர் ஆராதனையை நடத்தினர்.வெள்ளலூர் சாலையிலுள்ள, சி.எஸ்.ஐ.,யூனியன் சர்ச்சில் நேற்று அதிகாலை, 4:30 மற்றும் காலை, 9:00 மணிக்கும் சிறப்பு ஆராதனைகளை, ஆயர் கெர்சோம் ஜேக்கப் நடத்தினார், ஆராதனைக்குப் பின் காலை உணவு வழங்கப்பட்டது. சுந்தராபுரம் சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச், உப்பிலிபாளையம் இமானுவேல் சர்ச், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் சர்ச், செட்டிபாளையம் சாலை, அம்பேத்கர் நகர் ஐ.பி.ஏ., சர்ச், சித்தண்ணபுரம் புனித கொத்தில்தா, போத்தனூர் புனித சூசையப்பர், கோவைப் புதூர் குழந்தை இயேசு, புலியகுளம் புனித அந்தோணியார், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா, உள்ளிட்ட சர்ச்களில் நடந்த, சிறப்பு ஆராதனைகளில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். ஈஸ்டர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ