உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு மதபோதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்

இரு மதத்தினரிடையே பிரிவினைவாத பேச்சு மதபோதகர் மீது சர்ச் உறுப்பினர்களே புகார்

கோவை:கோவையில் சி.எஸ்.ஐ., மதபோதகர் பேச்சுக்கு கண்டனம் வலுத்துவரும் நிலையில், சக ஆலய உறுப்பினர்களே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர்.கோவை சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச்சில் கடந்த ஜூன், 16ம் தேதி நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மதபோதகர் பிரின்ஸ் கால்வின் பேசிய 'வீடியோ' சமூகவலைதளங்களில் வைரலாகி ஹிந்து அமைப்பினரிடையே கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.மேலும், அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யுமாறு கடந்த, 2ம் தேதி இந்து மக்கள் கட்சியினர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், இந்து முன்னணியினர் ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்தனர். அன்றைய இரவே ரேஸ்கோர்ஸ் போலீசாரும் வழக்கும் பதிவு செய்தனர்.மறுநாள், மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நான்கு பிரிவுகளில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அவரை கைது செய்யாது போலீசார் வேடிக்கை பார்ப்பதாக ஹிந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.இச்சூழலில், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் சர்ச் உறுப்பினர்களே, மதபோதகர் பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளதால் கைது நெருக்கடி அதிகரித்துள்ளது.நல்லுறவை கெடுக்கும்!ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் சர்ச் உறுப்பினர் ஜோஸ்வா டேனியல் அளித்த புகார் மனுவில்,'ஆலய வழிபாட்டில் பிரின்ஸ் கால்வின் பேசியது, இந்து மதத்தின் நம்பிக்கைக்கு அவதுாறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் வகையிலும், இரு மதத்தினரின் நல்லுறவை கெடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.இந்து மதத்தின் நம்பிக்கையையும் கேவலமாக சித்தரித்துள்ளார். எங்களது ஆலயத்தின் புனிதமான பலிபீடத்தை தனது சுயலாபத்துக்கு பயன்படுத்தியதால் எங்களது திருச்சபை மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இவ்வாறு இரு மதத்தினரிடையே பிரிவினையை துாண்டும் வகையில் பேசிய பிரின்ஸ் கால்வின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.மேலும், ஜோஸ்வா டேனியலிடம் கேட்டபோது,''இந்து-கிறிஸ்தவ மக்களிடம் பிரிவினையை துாண்டும் பிரின்ஸ் கால்வின் மீது, பேராயர் தீமோதி ரவீந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் பேராயர் மீதும் நடவடிக்கை எடுக்க நாங்கள் போராடுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை