உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

பாசக்கார கணவர் கைது

இருகூர், மருதாச்சலம் தேவர் வீதியை சேர்ந்தவர் ரத்தினபிரியா,33. இவரது கணவர் சம்பத்குமார்,40, நேற்று முன்தினம் குடிபோதையில் இருந்தார். மேலும் குடிப்பதற்கு ரத்தினபிரியாவிடம் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க மறுத்தததால் ஆத்திரமடைந்த சம்பத்குமார், ரத்தினபிரியாவின் இடது கையில் அரிவாளால் வெட்டியுள்ளார். காயமடைந்தவர் கோவை அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக அனுமதிக்கப்பட்டார். சிங்காநல்லுார் போலீசார் சம்பத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

3 சவரன் பறிப்பு

சரவணம்பட்டி, சத்தி ரோட்டில் உள்ள இரு சக்கர விற்பனை ஷோரூம் அருகே வசிப்பவர் புனிதவதி,57. வீட்டு வேலைக்கு செல்லும் இவர், நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் புனிதவதியின் மூன்று சவரன் தங்க நகையை பறித்து தப்பினர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' காட்சிகள் உதவியுடன் மர்ம நபர்களை தேடுகின்றனர்.

ஒரு லட்சம் ரூபாய் திருட்டு

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஹரிஸ் திங்கரா,49. பூஜைக்கான வெண்கல பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். கடந்த, 16ம் தேதி கோவை வந்த இவர் தலைமை தபால் அலுவலகம் அருகே ஹோட்டல் ஒன்றில், அறை எடுத்து தங்கியுள்ளார். வசூல் தொகையான ஒரு லட்சத்து, 69 ஆயிரத்து, 700 ரூபாயை அறையில் வைத்துவிட்டு, இரவு 10:00 மணிக்கு சாப்பிட சென்றுள்ளார். இரவு 10:45 மணிக்கு வந்து பார்த்தபோது பணம் திருடுபோயிருந்தது. புகாரின் பேரில், வெரைட்டிஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை பொருட்கள்

சரவணம்பட்டி போலீசார் சத்தி ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த, சரவணம்பட்டி, கீரணம்புதுார் ரோட்டை சேர்ந்த கீர்த்திராஜ்,19, வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, 20.225 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. கீர்த்திராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை