| ADDED : ஆக 22, 2024 11:54 PM
*வழிப்பறி செய்தவருக்கு சிறைபொள்ளாச்சியை சேர்ந்த கார்த்திகேயன், 31. தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் நடந்து சென்ற போது, சுங்கம் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திக், 28 என்பவர் வழிமறைத்து பணம் கேட்டுள்ளார். கொடுக்க மறுத்த கார்த்திகேயனின் கழுத்தை நெரித்து அவரின் பாக்கெட்டில் இருந்து ரூ. 200 பறித்து சென்றார். ரேஸ்கோர்ஸ் போலீசார் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். * பயணியின் செயின் மாயம் நீலகிரி மாவட்டம், குன்னுாரை சேர்ந்த லீலா, 72, விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், ஹோப் காலேஜ் பகுதியில் இருந்து காந்திபுரம் செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். காந்திபுரத்தில் இறங்கியபோது தனது கழுத்தில் இருந்த செயின் மாயமாகி இருப்பது தெரிவந்ததையடுத்த காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர். * ஸ்கூட்டர் மோதி பாதசாரி பலி கோவை, இருகூர் செல்வவிநாயகர் வீதியை சேர்ந்தவர் தனபால், 46. இவர் ஒண்டிப்புதுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, 18 வயது சிறுவன் ஓட்டிவந்த ஸ்கூட்டர் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் தனபாலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அவரை பரிசோதித்த டாக்டர் தனபால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர். * 2.8 கிலோ குட்கா பறிமுதல் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வடவள்ளி பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது அப்பகுதியில் இருந்த கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர். நேரு நகர் பகுதியில் உள்ள பெட்டி கடையில் பீளமேடு போலீசார் சோதனை செய்ததில் 8 பாக்கெட் குட்கா பிடிபட்டது. கணபதி பகுதியில் ரோந்து சென்ற சரவணம்பட்டி போலீசார் அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்ததில், 499கிராம் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன. குட்கா பதுக்கி வைத்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். * மதுபாட்டில்கள் பறிமுதல் ஆர்.எஸ் புரம் எல்லைக்குட்பட்ட லாலி ரோடு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பதாக மது விலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. மது விலக்கு போலீசார் சோதனை செய்த போது, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 24 மது பாட்டில்களை (குவாட்டர்) பறிமுதல் செய்தனர். மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த புதுக்கோட்டையை சேர்ந்த ஆறுமுகம், 65 என்பவரை கைது செய்தனர்.