உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயம், மண்பாண்ட தயாரிப்புக்கு களிமண்னை இலவசமாக எடுக்கலாம்

விவசாயம், மண்பாண்ட தயாரிப்புக்கு களிமண்னை இலவசமாக எடுக்கலாம்

கோவை : கோவையிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்ட தயாரிப்புக்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்ல, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:இயற்கை வளங்கள், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம் மற்றும் கண்மாய்களிலிருந்து, களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்யவும் கட்டணமின்றி எடுத்து பயனடையலாம். இதற்கான உத்தரவை அரசு வழங்கியது.இதையடுத்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் தாலுகாவை சேர்ந்த, 10 விவசாயிகளுக்கு களிமண், வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கு, கட்டணமின்றி எடுத்து பயனடைவதற்கான உத்தரவுகளை, கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார். நீர்வளத்துறை,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளம், கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்யவும் கட்டணமின்றி, எடுத்துச் செல்லலாம்.இதன் வாயிலாக பயன்பெறுவதோடு, ஏரி, குளம், கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமிக்க உதவும். தமிழக அரசின் இத்திட்டம் எளிமையாக செயல்படுத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் இணையம் வாயிலாக பெற்று, சரிபார்க்கப்பட்டு, கலெக்டர்களுக்கு பதிலாக தாசில்தார்களால் அனுமதி வழங்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.பயனாளிகள் தங்களது கிராமத்திலுள்ள நீர்நிலைகளிலிருந்து, வண்டல் மற்றும் களிமண்ணை இலவசமாக எடுத்துச் செல்லலாம். விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோர், tnesevai.tn.gov.inஎன்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை