உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை லோக்சபா தொகுதி ஓட்டு 377 ஊழியர்கள் எண்ணப்போறாங்க

கோவை லோக்சபா தொகுதி ஓட்டு 377 ஊழியர்கள் எண்ணப்போறாங்க

கோவை : கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு, 377 ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர, 'ஸ்ட்ராங் ரூம்'களில் இருந்து இயந்திரங்களை எடுத்து வர உதவியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், டிரைவர்கள் உட்பட இன்னும் பலர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.கோவை லோக்சபா தொகுதி ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்திய இயந்திரங்கள், ஜி.சி.டி., கல்லுாரியில் அமைத்துள்ள 'ஸ்ட்ராங் ரூம்'களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லுார், சூலுார் ஆகிய தொகுதிகளுக்கு தலா, 14 டேபிள்கள், பல்லடம் தொகுதிக்கு, 18 டேபிள்கள், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு, 20 டேபிள்கள் போடப்படுகின்றன. ஒரு டேபிளுக்கு ஒரு மைக்ரோ அப்சர்வர், ஒரு ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர், ஒரு உதவியாளர் என மூவர் நியமிக்கப்பட உள்ளனர். 20 சதவீத ஊழியர்கள் 'ரிசர்வ்' அடிப்படையில் இருப்பர்.இதன்படி, பல்லடம் - 66, சூலுார் - 51, கவுண்டம்பாளையம் - 72, கோவை வடக்கு - 51, தெற்கு - 51, சிங்காநல்லுார் - 51, தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு 35 ஊழியர்கள் என, மொத்தம், 377 ஊழியர்கள் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறைக்கு மட்டும், 29 ஊழியர்கள் தேவை என பட்டியலிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ