உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3 கிலோ கஞ்சா பறிமுதல் : கோவை வாலிபர் கைது

3 கிலோ கஞ்சா பறிமுதல் : கோவை வாலிபர் கைது

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, மூன்று கிலோ கஞ்சாவை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, பெரியாக்கவுண்டனுார் பஸ் ஸ்டாப் அருகே, கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கஞ்சாவை விற்பனைக்கு வைத்து இருந்த கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த ராஜ்குமார், 34, என்பவரை போலீசார் கைது செய்தனர்.அவரிடம் இருந்து, மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விசாரணையில், பொள்ளாச்சி பகுதியில் சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.மேலும், எங்கிருந்து கஞ்சா வாங்கி வரப்பட்டது, பொள்ளாச்சி பகுதியில் கஞ்சா சப்ளை செய்யும் பகுதிகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ