உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமுதாய அமைப்பாளராக வேண்டுமா விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

சமுதாய அமைப்பாளராக வேண்டுமா விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

பொள்ளாச்சி:உள்ளாட்சி அமைப்புகளில் சமுதாய அமைப்பாளர்களாக பணிபுரிய, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் காலியாக உள்ள சமுதாய அமைப்பாளர்களை தேர்வு செய்ய, குறிப்பிட்ட கல்வி மற்றும் அனுபவ தகுதிகளின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள், கடந்த ஆக., 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க கலெக்டர் அறிவித்திருந்தார்.தற்போது, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், அதிக அளவில் விண்ணப்பிக்கும் பொருட்டு வரும், 17ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சமுதாய அமைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினராக இருந்தால், அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.35 வயதிற்குட்பட்டவராக இருப்பது, இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பது, அரசு திட்டங்களில் களப்பணி வாயிலாக குறைந்தது ஓராண்டு அனுபவம், கோவை மாவட்டத்துக்குள் வசிப்பவராகவும் மற்றும் இரண்டு ஆண்டுக்கு மேலாக அமைக்கப்பட்ட பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதும் அவசியம்.தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீட்டிக்கப்பட்ட காலக்கெடு வரை விண்ணப்பங்களை, 'நகர்ப்புற வாழ்வாதார மைய மேலாளர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 2-வது தளம், பழைய கட்டடம், கலெக்டர் அலுவலக வளாகம், கோவை- 641 018' என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை