உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கலெக்டர் ஆய்வு தோட்டக்கலைப் பண்ணையில் கலெக்டர் ஆய்வு

கலெக்டர் ஆய்வு தோட்டக்கலைப் பண்ணையில் கலெக்டர் ஆய்வு

சூலுார்;சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில் 11 எக்டர் பரப்பளவில் அரசு தோட்டக்கலை பண்ணை செயல்படுகிறது. துறையின் சார்பில் புதுப்பிக்கப்பட்டு, புதிய தொழில்நுட்பங்களுடன் செயல்பட்டு வரும் இப்பண்ணையில், ஆண்டுக்கு, 50 டன் டிரைகோடெர்மா, விரிடி எனும் பூஞ்சாணக்கொல்லி உற்பத்தி செய்யப்படுகிறது.சம்பங்கி மலர்களில் இருந்து கான்கிரீட் பிரித்து மண்புழு உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. டிராகன் செடி வளர்ப்பு உள்ளிட்ட செயல் விளக்க திடல்கள் செயல்பட்டு வருகிறது.ஆண்டுக்கு, 50 லட்சம் மதிப்பிலான பழச்செடிகள் குழித்தட்டு நாற்றுகள், மூலிகை செடிகள் மற்றும் இடு பொருட்கள் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது.இப்பண்ணையின் செயல்பாடுகளை கலெக்டர் கிராந்தி குமார் நேரில் ஆய்வு செய்தார். மேலும், தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தையும் அவர் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ