மேலும் செய்திகள்
ஊட்டி சாலையில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
29-Aug-2024
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில், நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலைகள் உள்ளன. இந்த இரு சாலைகள் வழியாக, தினமும், 1000க்கும் மேற்பட்ட வாகனங்களில், ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இவர்கள் வாகனங்களில் செல்லும் பொழுது, சாலையின் ஓரத்தில் உள்ள வனப்பகுதியில் குப்பைகளையும், காலியான மது பாட்டில்களையும், வீசி செல்கின்றனர். இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.இந்த குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளில், மேட்டுப்பாளையம் குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஊட்டி, கோத்தகிரி சாலைகளின் ஓரத்தில் கிடந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள், ஒரு முறை பயன்படுத்திய டம்ளர்கள், கண்ணாடி பாட்டில்கள், பாலிதீன் கவர்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர். இவர்கள் 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் குப்பைகள் மது பாட்டில்களை சேகரித்தனர்.இவர்களுடன் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், வனவர் சிங்காரவேலு உட்பட வனப் பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பத்மாவதி செய்திருந்தார்.
29-Aug-2024