உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சென்டம் ரிசல்ட்டில் வணிகவியல் டாப்

சென்டம் ரிசல்ட்டில் வணிகவியல் டாப்

கோவை,:பிளஸ் 2 ரிசல்ட்டில் மற்ற பாடங்களை ஒப்பிடுகையில் வணிகவியல் பாடத்தில் மட்டும் 651 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.பிளஸ் 2 பொதுத் தேர்வில் கலை, அறிவியல் பாடப் பிரிவில் மொத்தம் 27 பாடங்கள் உள்ளன. இதில், பாடவாரியான சென்டம் ரிசல்ட்டில் வணிகவியல் பாடத்தில் 651 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதற்கு அடுத்த வரிசையில் கணினி அறிவியல் பாடத்தில் 590 பேர், பொருளாதாரவியலில் 359 பேர் சென்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.குறைந்தபட்சமாக தாவரவியல் மற்றும் மனையியலில் தலா ஒரு மாணவி மட்டுமே சென்டம் எடுத்துள்ளார். இதேபோல், ஆங்கிலம் மற்றும் புவியியல் பாடங்களில் தலா இருவர் பயாலஜியில் 6 பேர், பேசிக் எலக்ட்ரானிக்ஸில் 8 மாணவர்கள் மற்றும் விலங்கியலில் 9 பேர் சென்டம் பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 27 பாடங்களிலும் 3 ஆயிரத்து 304 பேர் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் மட்டும் 2,003 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ