உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

உடுமலை:உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களில் பொதுத்தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களில் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் குழும தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார், அனைத்து பள்ளி முதல்வர்கள் மாலா, மஞ்சுளாதேவி, செல்வக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.மேலும், பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி யுகாஷினி மற்றும் பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.கணித பாடத்தில் 13 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் தலா 5 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர். 490 மதிப்பெண்களுக்கு மேல் 7 மாணவர்களும், 480க்கு மேல் 21 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ