காப்பில் லா கிரேண்டே சர்வதேச செஸ்
கோவை, ;பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில், கோவை வீரர் இனியன் இரண்டாம் இடம் பிடித்து, நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின், டங்கிர்க் நகரில் கடந்த, 15 முதல், 22ம் தேதி வரை '41வது காப்பில் லா கிரேண்டே' சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில், 16 கிராண்ட் மாஸ்டர், 21 இன்டர்நேஷனல் மாஸ்டர்கள் உட்பட, 26 நாடுகளை சேர்ந்த, 533 வீரர்கள் கலந்துகொண்டனர்.இதில், இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் இனியன் பங்கேற்றார். 9 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் ஆறு வெற்றி, மூன்று டிரா என, 7.5 புள்ளிகளுடன் வீரர் இனியன், முதலிடத்தை சமன் செய்தார். தொடர்ந்து நடந்த 'டை பிரேக்'கில், இனியன் இரண்டாம் இடம் பிடித்தார்.பிரான்சின் இன்டர்நேஷனல் மாஸ்டர் மஹேல் முதல் இடத்தைப் பிடித்தார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டர் ராஜா ரித்விக் மூன்றாம் இடம் பிடித்தார். ஈரோட்டை பூர்வீகமாக கொண்டு கோவையில் வசிக்கும் வீரர் இனியனுக்கு, வாழ்த்துகள் குவிகின்றன.