உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் லீக் போட்டி:  யங் பிரண்ட்ஸ் அபாரம் 

கிரிக்கெட் லீக் போட்டி:  யங் பிரண்ட்ஸ் அபாரம் 

கோவை : மாவட்ட அளவிலான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'எல்.ஜி.எக்யூப்மென்ட்ஸ் கோப்பைக்கான' நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்தது. யங் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் சூரிய பாலா கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த, யங் பிரண்ட்ஸ் அணியின் வீரமணி (63) அரைசதம் விளாசினார். ரூபக் குமார் (35) மற்றும் சரத்குமார் (33) ஆகியோர் பொறுப்பாக விளையாடினர். யங் பிரண்ட்ஸ் அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு, 184 ரன்கள் சேர்த்தது. பின்னர், 185 ரன்கள் தேவை என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சூரியபாலா அணியினர் வரிசையாக சரிந்தனர். யங் பிரண்ட்ஸ் அணிக்கு சூர்யபிரகாஷ் (மூன்று விக்கெட்), மதன் குமார் (மூன்று விக்கெட்) ஆகியோரின் அசத்தல் பந்து வீச்சு கைகொடுக்க, சூரியபாலா அணியினரை, 30.2 ஓவர்களில் 57 ரன்களுக்கு சுருட்டினர். இதன் மூலம், யங் பிரண்ட்ஸ் அணியினர், 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ