உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் போட்டி; சிறுமுகை அணி முதலிடம்

கிரிக்கெட் போட்டி; சிறுமுகை அணி முதலிடம்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில், சிறுமுகை சேர்ந்த டிரீம் லெவன் அணி முதலிடம் பெற்றது. மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், 2019ம் ஆண்டு பணியாற்றிய சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பணியின்போது, மாரடைப்பால் இறந்தார். இவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பாஸ்கரன் கிரிக்கெட் கிளப்பும், மேட்டுப்பாளையம் காவல்துறையும் இணைந்து, ஐந்தாம் ஆண்டு நினைவு தொடர் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. மூன்று வாரம் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, மேட்டுப்பாளையம் நேஷனல் பள்ளி மைதானத்தில், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், நேஷனல் பள்ளி நிர்வாக கமிட்டி தலைவர் ராமசாமி, நிர்வாக கமிட்டி உறுப்பினர் சுதன் ஆகியோர் அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர். சிறுமுகை டிரீம் 11 அணி முதலிடம் பெற்றது. இந்த அணிக்கு, 10,005 ரூபாய் பரிசு தொகையும், கோப்பையும் வழங்கப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் பி.சி.சி., அணிக்கு இரண்டாவது பரிசுத்தொகை 6500 ரூபாயும், கோப்பையும், மேட்டுப்பாளையம் இடி மின்னல் கிரிக்கெட் அணிக்கு மூன்றாம் பரிசாக, 3005 ரூபாயும், கோப்பையும் வழங்கப்பட்டது. நான்காம் பரிசாக கோவை சிக்ஸர்ஸ் அணியினருக்கு, 1505 ரூபாயும், கோப்பையும் வழங்கப்பட்டது.தொடர் நாயகன் விருதை சிறுமுகை டிரீம் 11அணி வீரர் லோகுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அணிக்கான பரிசை மேட்டுப்பாளையம் காவல்துறைக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை