உள்ளூர் செய்திகள்

கிரைம் செய்திகள்

ஜன்னலை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

கோவை தடாகம் ரோடு, டி.வி.எஸ்., நகர், ராமகிருஷ்ணா நகர் பகுதியில் வசிப்பவர் கணேஷ், 63. இவர் குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்று திரும்பினார். வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.வீட்டுக்குள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், 14 செட் கம்மல், வளையல், 7 மோதிரங்கள் உள்ளிட்ட, 10 பவுன் எடையுள்ள நகைகள் காணாமல் போயிருந்தன. திருட்டு தொடர்பாக 'சிசிடிவி' பதிவுகள் கிடைத்துள்ளன. இது குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

350 கிலோ குட்கா பறிமுதல்மூவர் கைது

சூலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், நீலம்பூர் பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் தடை செய்யப்பட்டபுகையிலை பொருட்கள்,250 கிலோ சிக்கியது. காரில் வந்த, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வைரம் ராம் மகன் தரலாம்,31 மற்றும் பெங்களூருவை சேர்ந்த அப்துல் ரஹீம் மகன் அப்துல் ரகுமான், 22 ஆகிய இருவரை கைது செய்து, குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.சூலூர் எஸ்.ஐ., விக்னேஷ், சூலூரில் உள்ள படகுத் துறை அருகே ரோந்து சென்றார். அங்கு, குட்கா பொருட்களை பதுக்கி விற்ற, தூத்துக்குடியை சேர்ந்த வேலு மகன் ஸ்டாலின் பவுல், 34 என்ற நபரை கைது செய்து, 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தார். இதேபோல், சுல்தான்பேட்டை அடுத்த செலக்கரச்சல் பகுதியில் நடந்த சோதனையில், கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, பித்யா பாரிக் மகன் பினாய் பாரிக்,40 என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 1கிலோ, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

லேப்டாப்புகள் திருட்டு

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீராம், 25. தற்போது, மேட்டுப்பாளையம் ரோடு, கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி அருகே உள்ள ஹாஸ்டலில் தங்கி உள்ளார். இவருடன் கல்லூரி மாணவர் கபிலனும் தங்கி உள்ளார். ஸ்ரீராம் அதிகாலை எழுந்து நடை பயிற்சிக்கு சென்றார். அப்போது கபிலன் தூங்கிக் கொண்டிருந்தார். திரும்பி வந்து பார்க்கும்போது அறையில் இருந்த இரண்டு லேப்டாப்கள் காணவில்லை.இது குறித்து, துடியலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை