சைபர் பாதுகாப்பு புதுமைகள் ஏ.ஜே.கே., சார்பில் நுால் ரிலீஸ்
கோவை : சைபர் பாதுகாப்பு புதுமைகள் குறித்து, ஏ.ஜே.கே., கல்லுாரி சார்பில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டார். மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், ஏ.ஜே.கே., கல்லுாரி செயலாளர் அஜீத் குமார் லால் மோகன் பேசுகையில், ''சைபர் பாதுகாப்பு கருத்தரங்கு, ஏ.ஜே.கே., கல்லுாரி சார்பில் நடத்தப்பட்டது. 180க்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தனர். அதிலிருந்து, சிறந்த 105 கட்டுரைகளை ஒன்றிணைத்து புத்தகமாக தயார் செய்தோம். போலீசார் நன்கு உதவினர்,'' என்றார். மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளன. நம் அன்றாட வாழ்வில் சைபர் பாதுகாப்பு அவசியம். 2022ம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது சைபர் குற்றங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளன,'' என்றார். போலீஸ் துணை கமிஷனர்கள் சரவணக்குமார், சுகாசினி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் உடனிருந்தனர்.