உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

மேட்டுப்பாளையத்தில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

மேட்டுப்பாளையம்;பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக, பழுதடைந்த உறிஞ்சு கிணறு குழாய்களை பொருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில், குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நகராட்சி பகுதிகளுக்கு பவானி ஆற்றின் அருகே சாமன்னா நீரேற்று நிலையம் வாயிலாக தண்ணீர் எடுத்து சுத்திகரிப்பு செய்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனிடையே பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடர் வெள்ள பெருக்கு காரணமாக, சாமன்னா நீரேற்று நிலையத்தில் உள்ள உறிஞ்சி கிணற்றில் குழாய்களுக்குள் சேறு புகுந்து சேதமானது. தொடர்ந்து ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், இந்த குழாய்களை மீண்டும் பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாற்று ஏற்பாடாக புதிய திட்டத்தில் இருந்து பைப்லைன் அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வரும்போது, உறிஞ்சு கிணறுக்கு தண்ணீர் வருமாறு மேல் வால்வு திறந்து விடப்பட்டு தண்ணீர் எடுக்கப்படுகிறது.பழுதடைந்த உறிஞ்சு கிணறு குழாய்களை மீண்டும் பொருத்தி, உறிஞ்சு கிணற்றிற்கு தண்ணீர் வரத்து ஏற்படுத்த இயலும். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மேற்கண்ட பணிகள் முடிவடைந்த உடன் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ