உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளால் ரேஷன் பொருட்கள் சேதமாவதை தடுக்க கோரிக்கை

யானைகளால் ரேஷன் பொருட்கள் சேதமாவதை தடுக்க கோரிக்கை

வால்பாறை;வால்பாறையில், யானைகளிடம் இருந்து ரேஷன் கடையை பாதுகாக்க, உயரமான இடத்தில் கடைகளை அமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை தாலுகாவில் மொத்தம் உள்ள, 48 ரேஷன் கடைகளில், 16,279 ரேஷன் கார்டுகள் உள்ளன. எஸ்டேட் பகுதியில் செயல்படும் ரேஷன் கடைகளில் பெரும்பாலான கடைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ளன.வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் தேயிலை காட்டை ஒட்டியுள்ள துண்டு சோலையிலும், இரவு நேரங்களில் எஸ்டேட் பகுதியிலும் யானைகள் முகாமிட்டு, வீடு மற்றும் ரேஷன் கடைகளை சேதப்படுத்துகின்றன.இதனால், ஆண்டு தோறும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைவதோடு, தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களும் முறையாக வழங்கப்படுவதில்லை.யானைகள் நடமாடும் பகுதியில் மாதத்தில் ஒரு நாள் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.தொழிலாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளை யானைகள் தாக்குவதால், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ரேஷன் பொருட்கள் கிடைப்பதில்லை.இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், யானைகளுக்கு எட்டாதவாறு, உயரமான இடத்தில் (பில்லர் வைத்து) கட்டப்பட்ட கட்டடத்தில் ரேஷன் கடையை செயல்படுத்த வேண்டும். வாரத்தில் மூன்று நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி