உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலர் களம் அமைக்க மானியம் வேளாண் பொறியியல் துறை அழைப்பு

உலர் களம் அமைக்க மானியம் வேளாண் பொறியியல் துறை அழைப்பு

சூலுார்:மானியத்தில் உலர் களம் அமைக்க அனைவரும் முன்வர வேண்டும், வேளாண் பொறியியல் துறை அழைப்பு விடுத்துள்ளதுவேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மானியத்தில் உலர் களம் அமைத்து தரும் பணியை துவங்கியுள்ளது. சூலுார் வட்டார வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் நிவேதா கூறுகையில்,பொறியியல் துறை சார்பில் உலர் களம் அமைக்க மானியம் அளிக்கப்படுகிறது. 6 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம் முதல், 10 மீ., அகலம், 10 மீ., நீளம் வரையுள்ள உலர் களம் அமைத்து தரப்படும். 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள விவசாயிகள், சூலுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள பொறியியல் துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை