உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு பெண் குழந்தைகள் திட்டத்தில் வைப்பு நிதி

இரு பெண் குழந்தைகள் திட்டத்தில் வைப்பு நிதி

கோவை : கோவை மாவட்டத்தில், அரசின் இரு பெண்குழந்தைகள் திட்டத்தில், 2.62 கோடியில் வைப்பு நிதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.கோவை கலெக்டர் அலுவலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அரசின் இருபெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், 1,048 பயனாளிகளுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வைப்புநிதிப் பத்திரங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.முன்னதாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில், ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நுழைவு வாயிலையும், 2.49 கோடி மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளுக்கான புதிய வகுப்பறை கட்டடங்களையும் அமைச்சர் முத்துசாமி திறந்துவைத்தார்.கலெக்டர் கிராந்திகுமார், எம்.பி.,க்கள் ராஜ்குமார், ஈஸ்வரசாமி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, கூடுதல் கலெக்டர் ஸ்வேதாசுமன், உதவி கலெக்டர் அங்கத் குமார் ஜெயின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை