தினமலர் நாளிதழின் மகளிர் மட்டும் கொண்டாட பெண்களுக்கு அழைப்பு
கோவை : மகளிர் தினத்தை முன்னிட்டு வரும், 16ம் தேதி தினமலர் நாளிதழ் சார்பில் மகளிர் மட்டும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார். ஆம், தாய், சகோதரி, மனைவி, மகள் என ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கும் தங்களை உருக்கிக் கொள்பவர்கள் பெண்கள். நாட்டையும், ஆறு, மலைகள் என அனைத்தையும் பெண்கள் வடிவில் பார்க்கும் கலாச்சாரம் நம்முடையது.பெண்கள் இன்று, விண்வெளியையும் வென்று வீர நடை போடுகின்றனர். நாட்டின் முதுகெலும்பான, பெண்களை கவுரவிக்கும் வகையில், மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகையே வென்று காட்டும் வல்லமை படைத்த பெண்களுக்கான மகளிர் தினத்தை 'தினமலர்' நாளிதழ், உன்னத விழாவாக, கோவையில் கொண்டாடுகிறது.'தினமலர்' நாளிதழ் மற்றும் லட்சுமி சொரமிக்ஸ் இணைந்து வரும், 16ம் தேதி கோவை நவஇந்தியா, இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லுாரியில், 'மகளிர் மட்டும்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பவர்டு பை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், கோ-ஸ்பான்சராக திருப்பூர் வால்ரஸ் நிறுவனம், செலிபிரேஷன் பார்ட்னராக பி.எஸ்.ஆர்., சில்க்ஸ் உள்ளனர். அறிவுசார் பங்குதாரராக(நாலேஜ் பார்டனர்) பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் உள்ளது. பரிசுகளை பொன்மணி வெட்கிரைண்டர்ஸ் நிறுவனம் வழங்க உள்ளது.உள்ளங்களில் உவகை பொங்கச் செய்யும், மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும், சிறப்பு நடன, இசை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுதவிர, பெண்களுக்கான போட்டிகளும் நடக்க உள்ளன. வெற்றி பெறுவோருக்கு, கிரைண்டர், இன்டக்சன் ஸ்டவ், கெட்டில்கள், புடவைகள் பரிசாக வழங்கப்படும்.சமூகத்தின் உயர்வுக்கு பல்வேறு துறைகளில் தங்களை அர்பணித்த பெண் ஆளுமைகளுக்கு 'மலர் மங்கை' விருதுகள் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கான ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு தகவல்களை பி.ஆர்.ஜே., ஆர்த்தோ சென்டர் வழங்குகிறது. நிகழ்ச்சியில், பெண்கள் வயது வரம்பின்றி பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.விழாவில் பங்கேற்க உங்களுடைய மொபைல்போன் எண், முகவரியை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ்அப் வாயிலாகவும், 95666 97267 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.