உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதையில் தகராறு; தொழிலாளி கொலை  தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் கைது 

போதையில் தகராறு; தொழிலாளி கொலை  தி.மு.க., பிரமுகர் உட்பட இருவர் கைது 

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோட்டூர் ரோடு டாஸ்மாக் கடை அருகே, வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, கிழக்கு போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற கிழக்கு இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மற்றும் போலீசார், விசாரணை மேற்கொண்டனர். முதலில், இறந்தவர், கொலை செய்தவர்கள் யார் என தெரியாததால் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர்.இந்நிலையில், தி.மு.க., பிரமுகர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:பொள்ளாச்சி தொண்டாமுத்துாரை சேர்ந்தவர் அரவிந்த், 22, கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கோட்டூர் ரோடு டாஸ்மாக் மதுபான கடை அருகே சென்றார். அப்போது அவ்வழியாக, கூலித்தொழிலாளி விமல், 22, தனியார் பார் ஊழியரான தி.மு.க., பிரமுகர் பைசல், 33, ஆகியோர், பைக்கை தள்ளிக்கொண்டு சென்றனர்.எதிரே வந்த அரவிந்திடம் அவர்கள், பைக்கை ஸ்டார்ட் செய்து தருமாறு கூறினர். அவர்கள் போதையில் இருந்ததால், மறுப்பு தெரிவித்த அவரிடம், இருவரும் வாக்குவாதம் செய்தனர். விமல், பைசல் சேர்ந்து, அரவிந்தை குத்தி கொலை செய்தனர். இருவரையும் கைது செய்து விசாரிக்கிறோம். விசாரணைக்கு பின், வேறு ஏதாவது காரணம் உள்ளதா என தெரியும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கிருஷ்ணன்
ஆக 06, 2024 03:55

போதையில் கொலை செய்ய முடியும் ஆனால் பைக் ஸ்டார்ட் செய்ய முடியாது என்ன ஒரு லாஜிக் இல்லாத கதை இது


புதிய வீடியோ