மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
17-Aug-2024
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, தாமரைக்குளத்தில் அரசு பள்ளி அருகே ரோட்டோரத்தில் கழிவு நீர் தேங்கியுள்ளதால், தொற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமரைக்குளத்தில் உள்ள, அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி சுவற்றின் அருகே உள்ள கால்வாயில், கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.தேங்கி நிற்கும் கழிவுநீரால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மக்கள் கூறுகையில், 'தாமரைக்குளம் அரசு பள்ளி அருகே, தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன், காய்ச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்று ஊராட்சி பகுதிகளில் பல இடங்களில் சுகாதார பாதிப்பு நிலவுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
17-Aug-2024