| ADDED : ஜூலை 09, 2024 11:51 PM
கோவை;அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பென்ஷனர்கள் தங்களது குறைகளை பணியாற்றிய துறை மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர் வாயிலாக தீர்த்துக்கொள்ள, மாவட்ட நிர்வாகம் வாய்ப்பு வழங்கியுள்ளது.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:கோவை மாவட்டத்தில், பல்வேறு அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியப்பலன்கள் நாளது வரை கிடைக்கப்பெறாமல் இருப்பின், பணியாற்றிய அரசுத்துறை அலுவலர் வாயிலாக, தீர்வு காண வேண்டும்.ஓய்வூதிய குறைதீர்ப்பு மாதிரிப்படிவத்தில் பெயர் மற்றும் முகவரி, ஓய்வூதியத்திற்கான பி.பி.ஓ.எண், ஓய்வு பெற்றநாள், பணியின் போது கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் குறித்து தனித்தாளில் குறிப்பிட வேண்டும்.முந்தைய தகவல் குறித்த விபரம், வழக்கு ஏதும் தொடர்ந்திருந்தால் அதன் விபரம், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியஅலுவலகம் மற்றும் அலுவலர் விபரம் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.கலெக்டர் அலுவலகத்தில், ஆக.,2 அன்று நடைபெறும், ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில், பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.