உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட டேக்வாண்டோ போட்டி :மாரண்ண கவுடர் பள்ளி அபாரம்

மாவட்ட டேக்வாண்டோ போட்டி :மாரண்ண கவுடர் பள்ளி அபாரம்

கோவை,;மாவட்ட அளவிலா ஜூனியர் டேக்வாண்டோ போட்டியில், மாரண்ண கவுடர் பள்ளி அணி முதலிடம் பிடித்தது.கோவை மாவட்ட ஸ்போர்டஸ் டேக்வாண்டோ சங்கம் சார்பில், 15வது மாவட்ட கேடட் மற்றும் ஜூனியர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி, மாரண்ண கவுடர் பள்ளியில் நடந்தது.போட்டியை, கோவை மாவட்ட ஸ்போர்ட்ஸ் டேக்வாண்டோ சங்க தலைவர் லட்சுமண நாராயணசாமி, மாரண்ண கவுடர் அறங்காவலர் குழு உறுப்பினர் சீதாராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கேடட் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் நடந்த போட்டியில், மாரண்ண கவுடர் பள்ளி அணி ஒன்பது தங்கம், எட்டு வெள்ளி, ஆறு வெண்கலம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.தொடர்ந்து, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி அணி எட்டு தங்கம், இரண்டு வெள்ளி வென்று இரண்டாமிடத்தை பிடித்தது.இப்போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.பரிசளிப்பு விழாவில், மாரண்ண கவுடர் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தங்கராஜ், டேக்வாண்டோ சங்க துணை தலைவர் வி.ஆனந்த், நிர்வாகி ஏ.ஆனந்த், பெங்களூரு பல்கலை பேராசிரியர் நிகில் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி