உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிட்டோ--ஜாக் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர்கள் 54 பேர் கைது

டிட்டோ--ஜாக் ஆர்ப்பாட்டம்: ஆசிரியர்கள் 54 பேர் கைது

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், கல்வி மாவட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, டிட்டோ-ஜாக் ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில் முறைகேடுகளை களையக்கோரி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) வலியுறுத்தி வருகிறது.அவ்வகையில், பொள்ளாச்சி டிட்டோ-ஜாக் சார்பில், கல்வி மாவட்ட அலுவலகம் முன், நேற்று காலை, 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திரண்டனர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, தொடக்க கல்வியில் பணிபுரியும் 90 சதவீத ஆசிரியர்களுக்கு அரசாணையால் பாதிப்பு ஏற்படும். இந்த அரசாணை படி நடக்க உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங்கை ரத்து செய்து, திருத்திய பட்டியலை வெளியிட வலியுறுத்தி கோஷமிட்டனர்.தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் தங்கபாசு, பொள்ளாச்சி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்டச் செயலாளர் குமரகுருபரன், வட்டாரச் செயலாளர் பழனிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கல்வி மாவட்ட அலுவலகத்தை நோக்கிச் சென்று, முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து, 54 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை