உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்கர் பண்ணாத நாய்கள்

மக்கர் பண்ணாத நாய்கள்

கோவை:கோயமுத்துார் கென்னல் கிளப் சார்பில், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், நேற்று நாய் கண்காட்சி நடந்தது. 40க்கும் மேற்பட்ட இனங்களில் இருந்து, 300 நாய்கள் பங்கேற்றன.கென்னல் கிளப் தலைவர் தனுராய் கூறுகையில், ''கோயமுத்துார் கென்னல் கிளப் சார்பில், முதல்முறையாக, சாம்பியன்ஷிப் நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில், சான்றிதழ் வைத்திருக்கும் நாய்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. நாட்டு நாய்களுக்கும் பிரத்யேக சுற்று உள்ளது. 40க்கும் மேற்பட்ட இனங்களில் இருந்து, 300 நாய்கள் பங்கேற்றாலும், சிறந்த எட்டு நாய்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும். இதோடு, சிறந்த ஹேண்ட்லர், ஜூனியர் ஹேண்ட்லர் விருதும் வழங்கப்படும்,'' என்றார்.போட்டியில், நாய்களின் உடல் அமைப்பு, தனித்தன்மையை, நடுவர்கள் சுதர்சன் மற்றும் யசோதா ஆகியோர் மதிப்பிட்டனர். கோயமுத்துார் கென்னல் கிளப் துணை தலைவர் மகேஷ், செயலாளர் சரவணகுமார், இணை செயலாளர் யுவராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநகர மோப்பநாய் பிரிவில் இருந்து, நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் விதம் குறித்து, செயல்வழியில் விளக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை