உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறவைக்காய்ச்சல் பற்றிய வதந்திகளை நம்பாதீர்

பறவைக்காய்ச்சல் பற்றிய வதந்திகளை நம்பாதீர்

பொள்ளாச்சி:பறவைக்காய்ச்சல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என, சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கை: பறவைக்காய்ச்சல், பறவைகளுக்கு இடையே பரவும் வைரஸ் நோய். அரிதாக மனிதர்களை பாதிக்க வாய்ப்புள்ளது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி ஆகியவை நோய் அறிகுறிகள்.பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாகவும், சுகாதாரமற்ற நிலையிலும் பரவ வாய்ப்புள்ளது. ப்ளூ போன்ற அறிகுறிகள், சளி, காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.நோய்வாய்ப்பட்ட பறவைகள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள், இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.பறவைகள் அதிகம் இறந்தால் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முற்றிலும் சமைக்கப்படாத, இறைச்சி, முட்டை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி