உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள விநாயகர் கோவிலை அகற்றாதீங்க!

ரயில்வே ஸ்டேஷன் முன் உள்ள விநாயகர் கோவிலை அகற்றாதீங்க!

பொள்ளாச்சி;பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் நுழைவுவாயிலில், 60 ஆண்டுகளுக்கு முன, சக்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இங்கு, சுப்ரமணியர், ஐயப்பன், துர்கையம்மன், நவக்கிரஹங்கள் சன்னதிகள் உள்ளன.தற்போது, ரயில்வே ஸ்டேஷன் புதுப்பிப்பு பணிகள் நடக்கும் சூழலில், கோவிலை அகற்றுவதாக தகவல் பரவியது.இந்நிலையில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது, பொதுமக்கள், 'கோவிலை இடிக்க வேண்டாம்,' என வலியுறுத்தினர். இதையடுத்து, எம்.எல்.ஏ., ரயில்வே அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கையை வலியுறுத்தினார்.எம்.எல்.ஏ., கூறுகையில், 'ரயில்வே ஸ்டேஷன் முன்புள்ள கோவிலை அகற்ற வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, ரயில்வே நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது.கோவிலை அகற்ற வேண்டாம்; சுற்றுச்சுவரை மட்டும் அகற்றி விட்டு கோவிலை அதே இடத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்கு ரயில்வே நிர்வாகத்தினர் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி